ADDED : மே 05, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள பழைய
பாளையம், போடிநாய்க்கன்பட்டி, முத்துக்காப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தை மாத பட்டத்தில் மானாவாரியாக, விவசாயிகள் சோளம் விளைச்சலிட்டிருந்தனர்.
தை, மாசி மாதத்தில் அதிக பனிப்பொழிவால் சோளப்பயிர் நன்கு விளைந்து காணப்பட்டது. தற்போது அறுவடை பணி துவங்கியுள்ளது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் சோளத்தட்டு, தற்போது கோடை வெயிலால் தட்டுப்பாடு ஏற்பட்-டுள்ளது. இதனால், விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம், ஒரு வீசு தட்டு, 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

