ADDED : ஜூலை 11, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பருத்தியை விவசாயிகளிடம் வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஆர்.சி.எம்.எஸ்., என்ற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது. பருத்தியை பொருத்தவரை ஆ.சி.எச்., சுரபி, கொட்டு ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பருத்தி சீசன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பருத்தி விற்பனை நேற்று ஆர்.கவுண்டம்பாளையத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில் தொடங்கியது. 158 பருத்தி மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால், 7,089 ரூபாய், அதிகபட்சமாக, 7,590 ரூபாய்க்கு விற்பனையானது. சுரபி ரகம் குவிண்டால், 7,789 ரூபாய்க்கு விற்பனையானது.