ADDED : ஜூலை 25, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பருத்தியை விவசாயிகளிடம் வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு, ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது.
நேற்று ஆர்.கவுண்டம்பாளையத்தில் உள்ள கிடங்கில் ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால், 7,629 ரூபாய், அதிகபட்சமாக, 7,922 ரூபாய்க்கு விற்பனையானது. சுரபி ரகம் குறைந்தபட்சமாக, 8,503 ரூபாய், அதிகபட்சமாக, 9,999 ரூபாய்க்கு விற்பனையானது. கொட்டு ரகம், 5,500 லிருந்து, 5,799 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.