/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
/
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ADDED : ஜூலை 30, 2025 01:29 AM
நாமக்கல், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்திற்காக, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 66.415 மெட்ரிக் டன் பருத்திகளை கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.ெஹச்.,ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு, 7,699 முதல் 8,089 ரூபாய் வரையிலும், கொட்டு மட்ட ரகம், 4,699 முதல், 5,999 ரூபாய் வரை என, மொத்தம், 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது.
* திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று, 7,785 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தி பி.டி. ரகம் குவிண்டால், 6,969 முதல் 8,009 ரூபாய் வரையிலும், சுரபி ரகம் 10,052 முதல், 10,296 வரையிலும் ஏலம் போனது. 7,785 கிலோ பருத்தி, 6 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல கருப்பு எள் கிலோ, 112.80 முதல், 142.90 வரையிலும், வெள்ளை எள் கிலோ, 70 முதல், 130.60 வரையிலும், சிகப்பு எள் 60.80 முதல் 124.90 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. மொத்தம், 5 லட்சத்து
25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

