/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
/
ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ADDED : மே 03, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 125 மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதில் பி.டி., ரகம் குவிண்டாலுக்கு, 7,270 முதல், 8,210 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 3,800 முதல், 4,820 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும், 8ல், நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.