/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.22.63 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
/
ரூ.22.63 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ADDED : ஜூலை 17, 2025 01:47 AM
மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் சூரியகவுண்டம்பாளையம், மங்களம், சின்னகாளிப்பட்டி, அம்மாபட்டி, ஜக்கம்மா தெரு, பள்ளக்குழி அக்ரஹாரம், கரட்டுவலவு, செண்பகமாதேவி, துத்திபாளையம், ராமாபுரம், பருத்திப்பள்ளி, கருங்கல்பட்டி, சோமணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடை கொண்ட, 831 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், சுரபி ரகம், 8,399 முதல், 9,369 ரூபாய், பி.டி., ரகம், 6,819 முதல், 7,709 ரூபாய்; கொட்டு பருத்தி, 4,000 முதல், 5,055 ரூபாய் என, மொத்தம், 22.63 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. கடந்த வாரம், 21.17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, இந்த வாரம் வரத்து அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த ஏலம் வரும், 23ல் நடக்கிறது.

