/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.19 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
/
ரூ.19 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ADDED : ஜன 21, 2025 06:38 AM
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு பருத்தி பயிரிடப்ப-டுகிறது. இப்பகுதியில் விளையும் பருத்தியை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு, ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., விற்பனை செய்து வருகிறது.
அதன்படி, ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்-தது. 791 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வரத்தாகின. இதில் ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 7,099 ரூபாய்; அதிகபட்சம், 8,160 ரூபாய்; டி.சி.எச்., குறைந்தபட்சம்,
8,009 ரூபாய்; அதிக-பட்சம், 10,260 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,200 ரூபாய்; அதிகபட்சம், 4,825 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 691, டி.சி.எச்., 44, கொட்டு, 56 மூட்டை என, மொத்தம், 791 மூட்டை பருத்தி, 19
லட்சம் ரூபாய்க்கு விற்பனை-யானது.