/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
/
ரூ.2.50 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
ADDED : மே 08, 2025 01:29 AM
மல்லசமுத்திரம்,
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், சூரியகவுண்டம்பாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, திம்மிபாளையம், பருத்திப்பள்ளி, ராமாபுரம், மேட்டுபாளையம், கூத்தாநத்தம், பீமரப்பட்டி, மேல்முகம், மரப்பரை, மொரங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 102 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு
வந்திருந்தனர்.
இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,340 ரூபாய் முதல், 8,069 ரூபாய், கொட்டு பருத்தி, 3,820 ரூபாய் முதல், 5,540 ரூபாய் என, மொத்தம், 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 14ல் நடக்கிறது.