/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
/
ரூ.2.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ADDED : ஜூலை 15, 2025 01:25 AM
வெண்ணந்துார், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், அக்கரைப்பட்டி ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அக்கரைப்பட்டி, அளவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், மதியம்பட்டி, நாச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.எச்., ரகம்,- 53 மூட்டை, சுரபி,- 40 மூட்டை என, மொத்தம், 93 மூட்டை பருத்தி வரத்தானது. ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம் குவிண்டால், 7,000 ரூபாய், அதிகபட்சம், 7,570 ரூபாய், சுரபி ரகம் குறைந்தபட்சம், 8,200, அதிகபட்சம், 8,979 ரூபாய் என, மொத்தம், 2.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.