/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர் சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : அக் 29, 2024 01:12 AM
குமாரபாளையம் நகராட்சிக்கு கெட்ட பெயர்
சுகாதாரத்துறை மீது கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
குமாரபாளையம், அக். 29-
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று நகர்மன்ற கூட்டம் நடந்தது. தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.
இதில் நடந்த விவாதம் பின்வருமாறு:
கதிரவன், தி.மு.க.,: வடிகால் துாய்மைப்பணிக்கு ஆட்களே வருவதில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கின்றனர். இதுகுறித்து ஆலோசித்து ஆட்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மராஜன், தி.மு.க.,: என் வார்டில், சுகாதார பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? போன் செய்தாலும் எடுப்பது கிடையாது. வடிகாலில் இருந்து வெளியில் எடுத்து போடப்பட்ட மண் குவியலில், 3 அடிக்கு செடிகள் முளைத்துள்ளன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோவிந்தராஜ், தி.மு.க.,: ஒரே ஒரு துாய்மைப்பணியாளர் வந்து கொண்டிருந்தார். அவரும் தற்போது வருவதில்லை. போன் போட்டாலும் எடுப்பதில்லை. ஆட்கள் வருவார்களா? இல்லையா? வார்டு மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பேட்டரி வண்டி என்ன ஆனது?
சுமதி சுயே.,: வடிகால் துாய்மைப்பணிக்கு ஆட்கள் வரச்சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
பாலசுப்ரமணி, அ.தி.மு.க.,: குமாரபாளையம் நகராட்சி, சிறந்த நகராட்சி என விருது பெற்றுள்ளது. ஆனால், சிறந்த நகராட்சி என்ற பெயர் இல்லாமல் போகும் அளவிற்கு, குப்பைகள் அகற்றாமல், வடிகால்களை துாய்மை படுத்தாமல் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.
வெங்கடேசன், துணைத்
தலைவர்: சுகாதாரத்துறை அலுவலர்கள், வார்டுக்குள் வந்தால் தான் எங்கு, என்ன குறை என்பது தெரியவரும். எந்த கவுன்சிலர்களையும் அவர்கள் சந்திப்பதில்லை. அடிக்கடி மீட்டிங் போட்டு, பணியாளர்களுக்கு பணியை வரன்முறைப்படுத்த வேண்டும்.
விஜய்கண்ணன், தலைவர்: ஆட்கள் பற்றாக்குறை என்றனர். அது சரி செய்யப்பட்டது. குப்பை கொட்ட இடம் இல்லை; அதனால், தான் குப்பை எடுக்க முடியவில்லை என்றனர். அதற்கும் இடம் ரெடி செய்து விட்டோம். அடுத்து குப்பை வண்டிக்கு டிரைவர் இல்லை என்றனர். ஆட்கள் நியமனம் செய்து அதனையும் சரி செய்யப்பட்டது. அடுத்து பொக்லைன் ஓட்ட ஆள் இல்லை; அதனால் தான் பணி செய்ய முடியவில்லை என்றனர். எல்லாம் சரி செய்து கொடுத்தாலும், மெடிக்கல் லீவில் போய் விடுகின்றனர். நகராட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி, சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

