/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொசு மருந்து அடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
/
கொசு மருந்து அடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 01:18 AM
ராசிபுரம், ஜன. 2-
ராசிபுரம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், மன்ற கூட்டரங்கில் நடந்தது. தலைவர் கவிதா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கோமதி, நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில், கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
முக்கியமாக, சாக்கடை வசதி, சாக்கடையை துார்வாருதல், கொசு மருந்து அடித்தல், சீரான குடிநீர் வினியோகம், உப்பு தண்ணீர் குழாய்களை சரி செய்து முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகம் வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய தலைவர் கவிதா, ''சிறிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்கப்படும். நீண்ட நாள் வேலைகளை படிப்படியாக செய்து முடித்துத்தரப்படும்,'' என்றார்.

