ADDED : ஜூலை 05, 2025 01:50 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு அறிமுக பயிற்சி மற்றும் துணிப்பை விழிப்புணர்வு முகாம் முதல்வர்(பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. அதில், மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
இலவச பயிற்சி வகுப்பு, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், விபத்தில்லா பயணம் குறித்து விளக்கினர். மேலும், மகளிர் மேம்பாட்டு பிரிவு சார்பில், பெண்களின் உரிமை, பாதுகாப்பு, பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னை, தீர்ப்பதற்கான வழிவகைகளை விளக்கினர்.
தொடர்ந்து, நெகிழி பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, எளிதில் மட்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினர்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, மகளிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி, பேராசிரியர்கள் மோகன்ராஜ், ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.