/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு
/
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்; கால்நடைகளுக்கு நன்றி செலுத்தி வழிபாடு
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விவசாய நிலங்களில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, கடந்த, 13ல் துவங்கி, இன்று வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப்பண்டிகை, நேற்று முன்தினம், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கரும்புகளுடன், பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று, விவசாயிகளின் நண்பனாகவும், உழவுக்கு உயிருட்டும் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி செலுத்தும் வகையில், விருந்து படைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.முன்னதாக, நேற்று காலை மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி வர்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிட்டு அழகுபடுத்தினர். பின், பழைய மூக்கணாங்கயிறுகளை மாற்றி புதிய மூக்கணாங்கயிறுகளை மாட்டினர். தொடர்ந்து, வழிபாடு நடத்தி, மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி உற்சாகமாக கொண்டாடினர். இன்று, காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

