/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாடுகள் வரத்து சரிந்தது ரூ.2.20 கோடிக்கு வியாபாரம்
/
மாடுகள் வரத்து சரிந்தது ரூ.2.20 கோடிக்கு வியாபாரம்
மாடுகள் வரத்து சரிந்தது ரூ.2.20 கோடிக்கு வியாபாரம்
மாடுகள் வரத்து சரிந்தது ரூ.2.20 கோடிக்கு வியாபாரம்
ADDED : நவ 19, 2025 01:57 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள புதன் சந்தையில், திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் மதியம் வரை மாட்டுச்சந்தை நடக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்க, விற்க விவசாயிகள், வியாபாரிகள் புதன் சந்தை பகுதியில் கூடுவர். இங்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.
தற்போது, கார்த்திகை மாத பிறப்பால், மாடுகள் வரத்து சரிந்தது. ஆந்திர, கர்நாடகா பகுதிகளில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகள் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் இறைச்சி மாடுகள், 28,000 ரூபாய்க்கும்; கறவை மாடுகள், 45,000 ரூபாய்க்கும்; கன்று குட்டிகள், 18,000 ரூபாய்க்கும் விற்பனையாகின. மொத்தம், 2.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
நடந்தது.