/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.25 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.25 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஜூலை 09, 2025 01:36 AM
சேந்தமங்கலம், புதன் சந்தையில், ரூ.2.25 கோடிக்கு மாடுகள் விற்பனை நடந்தது.
புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தையில் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க மற்றும் விற்க விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்திலிருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகள் குறைந்த அளவே விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதேபோல் மாடுகளை வாங்குவதற்காக வந்திருந்த, வியாபாரிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. இறைச்சி மாடுகள் 29 ஆயிரம் ரூபாய், கறவை மாடுகள், 20 ஆயிரம் ரூபாய், கன்று குட்டிகள், 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 2.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.