'குழந்தைகள் ஆக்கப்பூர்வமான கலைகளை கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்'
'குழந்தைகள் ஆக்கப்பூர்வமான கலைகளை கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்'
ADDED : ஆக 30, 2026 05:37 AM
நாமக்கல்:''குழந்தைகளை ஜவகர் சிறுவர் மன்றத்தில் சேர்த்து, ஆக்கப்பூர்வமான கலைகளை கற்றுக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்,'' என, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் மகேஸ்வரி அறிவுறுத்தினார்.
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், ஜவகர் சிறுவர் மன்றம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், நாமக்கல் மாநகராட்சி கோட்டை உயர்நிலை பள்ளியில் செயல்படுகிறது. இந்நிலையில், ஜவகர் சிறுவர் மன்ற செயல்பாடுகளை, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் மகேஸ்வரி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவ, மாணவியர் கற்றுக் கொள்ளும் கலை வகுப்புகளை பார்வையிட்டார். மாணவ, மாணவியர் யோகா மற்றும் சிலம்பம் ஆடி, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாநில, தேசிய அளவில், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியரை, இயக்குனர் மகேஸ்வரி பாராட்டினார்.
அப்போது, ''விடுமுறை நாட்களில், குழந்தைகளை அழைத்து வந்து, ஜவகர் சிறுவர் மன்றத்தில் சேர்த்து, ஆக்கப்பூர்வமான கலைகளை கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும்,'' என, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
