/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காரவள்ளி காப்புக்காடு வனப்பகுதியில் மரக்கன்றுகளுக்கு ஊன்றுகோல் அமைப்பு
/
காரவள்ளி காப்புக்காடு வனப்பகுதியில் மரக்கன்றுகளுக்கு ஊன்றுகோல் அமைப்பு
காரவள்ளி காப்புக்காடு வனப்பகுதியில் மரக்கன்றுகளுக்கு ஊன்றுகோல் அமைப்பு
காரவள்ளி காப்புக்காடு வனப்பகுதியில் மரக்கன்றுகளுக்கு ஊன்றுகோல் அமைப்பு
ADDED : அக் 12, 2024 01:13 AM
காரவள்ளி காப்புக்காடு வனப்பகுதியில்
மரக்கன்றுகளுக்கு ஊன்றுகோல் அமைப்பு
சேந்தமங்கலம், அக். 12-
கொல்லிமலை அடிவாரம், காரவள்ளியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் சாயாமல் இருக்க சவுக்கு குச்சிகள் நடும் பணி நடக்கிறது.
கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த மார்ச், ஏப்., மாதங்களில் கடும் வெயிலால் அடிவாரத்தில் இருந்த லட்சக்கணக்கான மூங்கில் மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து, இப்பகுதியில் பெய்து வரும் மழையால் மீண்டும் மரங்கள் துளிர் விட்டுள்ள நிலையில், முற்றிலும் முளைக்காமல் ஏராளமான மரங்கள் காய்ந்துள்ளன.
இந்த மரங்களுக்கு பதிலாக, காரவள்ளி காப்புக்காட்டில் வனத்துறை சார்பில், வேங்கை, மலைவேம்பு, நீர் மருது உள்ளிட்ட, 15 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள், தற்போது பெய்யும் மழையில் உயரமாக வளர்ந்துள்ளன. ஆனால், இந்த மரங்களை காட்டுப்பன்றிகள் உடைத்து விடுகின்றன. இதை தடுக்கும் வகையிலும், கன்றுகள் சாயாமல் இருக்கவும் வனத்துறை சார்பில், வெளிமாவட்டங்களில் இருந்து சவுக்கு குச்சிகள் கொண்டு வரப்பட்டு, ஊன்றுகோல் நடும் பணி நடக்கிறது.
இதுகுறித்து, வனச்சரகர் பழனிசாமி கூறுகையில், ''கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மழையால் நன்று வளர்ந்துள்ளன. இந்த மரக்கன்றுகள் சாயாமல் இருக்க ஊன்றுகோல் நடுவதற்காக, சவுக்கு குச்சிகள் கொண்டு வரப்பட்டு ஊன்றுகோல் நடும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

