/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
/
பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
பால் குளிரூட்டும் மையத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 09, 2024 03:57 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில், தொகுப்பு பால் குளி-ரூட்டும் நிலையம் உள்ளது. இதை, நேற்று இரவு பால்வளத்-துறை மற்றும் கதர் வாரிய கிராம தொழில்துறை அமைச்சர் ராஜ-கண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது, சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் உற்பத்தியா-ளர்கள் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம், பால் குளி-ரூட்டும் நிலையத்தின் மொத்த கொள்ளளவு, தினசரி கொள்-முதல் செய்யப்படும் பாலின் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உத-விகள், நிலுவையின்றி பணப்பட்டுவாடா மேற்கொள்ளுதல், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தடையின்றி உடனுக்குடன் வழங்க அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் வினித், கலெக்டர் உமா உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.