தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பால்வளத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு

பால்வளத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு


ADDED : செப் 06, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கலெக்டர் மதுபாலன் ஆகியோர் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

குமாரபாளையம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள், 7.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருவதை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டை, மாதம் ஒருமுறை துாய்மை பணியாளர்களை கொண்டு துாய்மைப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து, தலைமை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு செய்து, குளோரின் அளவு பரிசோதித்தார்.அதை தொடர்ந்து, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ரமேஷ், அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us