/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
பள்ளிப்பாளையம்: டி.வி.எஸ்.,மேடு பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால், மின் தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
பள்ளிப்பாளையம் அடுத்த, டி.வி.எஸ்.,மேடு பகுதியில் சாலை-யோரத்தில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் நள்-ளிரவு, அடையாளம் தெரியாத வாகனம் டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் டிரான்ஸ்பார்மரின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் பிரதான மின் ஒயர்களும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் நள்ளிரவு முதலே டி.வி.எஸ்.,மேடு, மாதாபுரம், நுாறு தறி குடோன் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட்-டது.நேற்று காலை மின் வாரிய பணியார்கள், சேதமடைந்த மின் ஒயரை மாற்றி அமைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்-ளிரவு முதலே மின் தடை எற்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். விசைத்தறி தொழிலாளர்களும் பாதிக்-கப்பட்டனர்.