/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
/
சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
ADDED : அக் 31, 2025 01:11 AM
பள்ளிப்பாளையம், காவிரி பகுதியில் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே காவிரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில், விரிசல் அடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே மின்கம்பம், பெரிய பிளாஸ்டிக் டிரமில் சிமென்ட் கலவை போட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மின் கம்பம் சேதமடைந்து ஆபத்தான  நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் அமைந்துள்ள சாலை வழியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும்  சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மின் கம்பம் எந்நேரமும் விழும் ஆபத்து உள்ளதால், அந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். ஆகவே பாதுகாப்பு கருதி,  மின் துறை அதிகாரிகள், சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.