தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆவணம் இல்லை என்றால் ஆபத்து

ஆவணம் இல்லை என்றால் ஆபத்து

ஆவணம் இல்லை என்றால் ஆபத்து


ADDED : மார் 21, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப்பாளையம்; பணத்திற்கும், ஜவுளிக்கும் உரிய ஆவணம் இல்-லையென்றால் பறிமுதல் நடவடிக்கை பாய்-வதால், பள்ளிப்பாளையம் பகுதி ஜவுளி உற்பத்தி-யாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விதகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, அனைத்து தொகுதிகளிலும், தனி தனி குழு அமைத்து, வாகன சோதனை, பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாக ஈடு-பட்டு வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்-படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லையென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாமக்கல், ஈரோடு மாவட்ட எல்-லையான பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றுப்பா-லத்தில், பறக்கும் படையினர் இரவு, பகலாக சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுப-டுகின்றனர். பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் ஜவுளி உற்பத்தி முக்கிய தொழி-லாகும். பள்ளிப்பாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள், இந்த பாலத்தில் அமைக்-கப்பட்டுள்ள சோதனை சாவடியை கடந்து தான், ஈரோடுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்-றனர். விற்ற துணிகளுக்கு பணத்தை பெற்றுக்-கொண்டு வருகின்றனர்.

இது வழக்கமாக நடந்து வரும் செயலாகும். அவ்-வாறு செல்லும் போதும், வரும் போதும், சோதனை சாவடியை கடந்து தான் வர வேண்டும். எல்லைப்பகுதியாக உள்ளதால், சோதனை தீவிரமாக இருக்கும் என்பதால், பணத்தோடு செல்ல ஜவுளி உற்பத்தியாளர்கள் தயக்கமடைந்தனர்.

இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்-பட்டுள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவ-லையடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us