/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறந்த தந்தையின் உடல்; தானமாக வழங்கிய மகள்
/
இறந்த தந்தையின் உடல்; தானமாக வழங்கிய மகள்
ADDED : டிச 04, 2024 06:54 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூர் பஞ்.,க்குட்பட்ட தோப்பூர் பஸ் ஸ்டாப்பில், ஆண் சடலம் கிடப்பதாக, வி.ஏ.ஓ., சுபாஷ் கந்தசாமி, மோகனுார் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், எஸ்.ஐ., கவிப்பிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெய்க்காரன்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த கொண்டப்பன், 75, என்பது தெரியவந்தது. திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் அடுத்த தேவர்மலையில் வசித்து வரும் அவரது மகள் ரங்கம்மாள், 50, கணவர் சின்னுசாமியுடன் வந்து, அடையாளம் காட்டினார். தொடர்ந்து, தந்தை கொண்டப்பன் உடலை, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க முடிவு செய்தார். அதற்கான கடிதத்தையும் போலீசாரிடம் வழங்கினார். அதையடுத்து, இறந்துபோன கொண்டப்பன் உடலை, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.