/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்; நகராட்சி சேர்மன் ஆய்வு
/
தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்; நகராட்சி சேர்மன் ஆய்வு
தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்; நகராட்சி சேர்மன் ஆய்வு
தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்; நகராட்சி சேர்மன் ஆய்வு
ADDED : செப் 20, 2024 02:42 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் பருவநிலை மாறுபாட்டால் மீன்கள் செத்து மிதந்தது. இதை, நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு, ஈரோடு ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் திடீரென ஏற்பட்ட வெப்பத்தால் தண்ணீர் சூடானதை தொடர்ந்தும், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறு சிலை வைத்திருந்தவர்கள் சிலைகளைஆற்றுக்கு கொண்டு செல்லாமல் குளத்திலேயே கரைத்ததாலும், ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இங்கு துர்நாற்றம் வீசுவதாக மக்களிடம் இருந்து வந்த புகாரையடுத்து, நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு தெப்பக்குளத்தை பார்வையிட்டு துாய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உடனிருந்தார்.