/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு
/
இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, திருமணிமுத்தாறு குளத்தில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன.
இவை அவ்வப்போது இரை தேடி, அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன. அப்போது தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றன. இதுபோல், பரமத்தி அருகே, பிள்ளைகளத்துார் கிராமத்தில் திருமணிமுத்தாறு கரையோரத்தில் தெரு நாய்கள், ஒரு வயதுடைய பெண் புள்ளி மானை துரத்தி சென்று, நேற்று கடித்து குதறின. இதில் அந்த புள்ளிமான் இறந்தது. நாமக்கல் வனச்சரக காப்பாளர் அசேன் ஷெரிப், இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புள்ளிமான் இரை தேடி ஊருக்குள் வரும்போது, நாய்கள் கடித்து மான்கள் இறப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.