ADDED : ஜன 20, 2024 09:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மதுரைவீரன் புதுாரை சேர்ந்தவர் ராஜீ, 65. இவர் கடந்த, 17 மாலை, 6:00 மணிக்கு, கீரம்பூர் அருகே, டூவீலர் மோதிய விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, உறவினர்கள் முன்வந்தனர். இது தொடர்பாக சென்னை, 'டிரான்ஸ்டன்' அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கல்லீரல், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, ஒரு சிறுநீரகம், மேல்மருவத்துார் மருத்துவ கல்லுாரிக்கு, மற்றொரு சிறுநீரகம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் என, உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இறந்துபோன ராஜீவின் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த உறவினர்களை, மாவட்ட நிர்வாகம் பாராட்டி, நன்றி தெரிவித்தது.