/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
ADDED : அக் 10, 2024 02:03 AM
பஸ் ஸ்டாண்ட் நுழைவு வளைவிற்கு
அண்ணாதுரை பெயர் சூட்ட முடிவு
நாமக்கல், அக். 10-
நாமக்கல் மாநகராட்சியின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாநகராட்சி, 2-வது வார்டு முதலைப்பட்டியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட உள்ள வரவேற்பு நுழைவு வளைவிற்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு வளைவு என பெயர் சூட்ட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டத்தில் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், நாமக்கல் புதிய ஸ்டாண்டில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் ஆண்டு உரிம இனங்களுக்கு, உரிமம் அளிக்க கடந்த, 4ல் பொது ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டது. இந்த ஏலத்துக்கு மாமன்றம் அங்கீகாரம் அளித்தும், ஏலம் போகாத கடைகளுக்கு மறுஏலம் நடத்துவது உள்பட, 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

