/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அருகே பத்திர எழுத்தரின் உதவியாளர் வெட்டி படுகொலை
/
நாமக்கல் அருகே பத்திர எழுத்தரின் உதவியாளர் வெட்டி படுகொலை
நாமக்கல் அருகே பத்திர எழுத்தரின் உதவியாளர் வெட்டி படுகொலை
நாமக்கல் அருகே பத்திர எழுத்தரின் உதவியாளர் வெட்டி படுகொலை
ADDED : அக் 21, 2025 02:12 AM
நாமக்கல், நாமக்கல் அருகே, பத்திர எழுத்தரின் உதவியாளர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, சாலையோரம் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி, நான்குரோடு சத்யா நகர் பகுதியில், நேற்று காலை அப்
பகுதி மக்கள், 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலை ஓரமாக ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர், காமராஜபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் கோபிகுமரன், 30, என்பது தெரிந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பத்திர எழுத்தரின் உதவியாளர் மற்றும் பகுதி நேர கார் டிரைவர் உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை, வேலைக்கு சென்ற கோபிகுமரன், இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தீபாவளியான நேற்று காலை, கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மோப்ப நாய், 'ஸ்டெபி' வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. உடலை, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.