/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் இணைப்பு வழங்க தாமதம்: பா.ஜ., குற்றச்சாட்டு
/
குடிநீர் இணைப்பு வழங்க தாமதம்: பா.ஜ., குற்றச்சாட்டு
குடிநீர் இணைப்பு வழங்க தாமதம்: பா.ஜ., குற்றச்சாட்டு
குடிநீர் இணைப்பு வழங்க தாமதம்: பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : செப் 22, 2024 06:33 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக செய்யவில்லை என, கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு போதுமான தண்ணீர் வினியோகிப்பது இல்லை. இதனால், அடிக்கடி மூடி விடுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள, 150 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்போது தரம் குறைந்த பி.வி.சி., பைப்புகளை பொருத்தியுள்ளனர். 15க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை, பல தெருக்களுக்கு சாக்கடை வசதி இல்லை.
அம்மன் நகரில் குடியிருக்கும், 22 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர் என, பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். தகவலறிந்த, பா.ஜ., மத்திய நலத்திட்டப்பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஏழுமலை, தமிழரசு, பெரியசாமி உள்ளிட்டோர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். குறைகளை பார்வையிட்ட அவர்கள், பா.ஜ., சார்பில் பி.டி.ஓ., கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். விரைவில் பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.