வெல்டிங் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க கோரிக்கை
வெல்டிங் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 24, 2026 05:35 AM
ராசிபுரம்:ராசிபுரம்
அடுத்த சிங்களாந்தபுரத்தில், தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள்
நல சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள்
தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் பாலாஜி தலைமை
வகித்தார். செயலாளர் முகமது இத்ரீஸ், பொருளாளர் முரளிதரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். இதில், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,
வெல்டிங் தொழிலாளர்களுக்கு என, அரசு சார்பில் தனியாக நலவாரியம்
அமைக்க வேண்டும். தொழிற்துறை பயன்பாட்டிற்கு சலுகை கட்டணத்தில்
மின்சாரம் வழங்க வேண்டும். மூலப்பொருளான இரும்பின் விலை நாள்தோறும்
தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், இந்த விவகாரத்தில் அரசு
உடனடியாக தலையிட்டு இரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வசதியை அரசு
செய்து தர வேண்டும். மேலும், சொந்த வீடு இல்லாத ஏழை வெல்டிங்
தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
