/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் மிகப்பெரிய நுாலகம் நுாலக வார விழாவில் கோரிக்கை
/
நாமக்கல்லில் மிகப்பெரிய நுாலகம் நுாலக வார விழாவில் கோரிக்கை
நாமக்கல்லில் மிகப்பெரிய நுாலகம் நுாலக வார விழாவில் கோரிக்கை
நாமக்கல்லில் மிகப்பெரிய நுாலகம் நுாலக வார விழாவில் கோரிக்கை
ADDED : நவ 23, 2024 01:22 AM
நாமக்கல்லில் மிகப்பெரிய நுாலகம்
நுாலக வார விழாவில் கோரிக்கை
நாமக்கல், நவ. 23-
நாமக்கல் மாவட்ட மைய நுாலகம் மற்றும் மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில், 57வது தேசிய நுாலக வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாவட்ட மைய நுாலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். நுாலகர் சக்திவேல் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட மைய நுாலக வாசகர்கள் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார், புதிதாக புரவலராக, பெரும் புரவலர்களாக இணைந்த, 18 கொடையாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். மாவட்ட நுாலக அலுவலர் மாதேஸ்வரன், வாசகர் வட்ட பொருளாளர் சித்த மருத்துவர் ராஜவேல், துணைத்தலைவர் கலை இளங்கோ, போட்டி நுாலக வாசகர் வட்ட தலைவர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் மிகப்பெரிய நுாலகம் அமைத்துள்ளது போல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் பிறந்த ஊரும், கல்வி நகரமாக திகழும் நாமக்கல்லில், அனைவரும் பயன்பெறும் வகையில், மிகப்பெரிய நுாலகம் அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயுரப்பன் பேசினார்.
விழாவில், தமிழக அரசின் பொது நுாலகத்துறை சார்பில், 'நல்நுாலகர்' விருது பெற்ற கனகலட்சுமி, கவுரவிக்கப்பட்டார். தமிழ் ஆர்வலர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.