/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலில் படிக்கட்டு இடிப்பு ஆஞ்சநேயர் பக்தர்கள் அவதி
/
கோவிலில் படிக்கட்டு இடிப்பு ஆஞ்சநேயர் பக்தர்கள் அவதி
கோவிலில் படிக்கட்டு இடிப்பு ஆஞ்சநேயர் பக்தர்கள் அவதி
கோவிலில் படிக்கட்டு இடிப்பு ஆஞ்சநேயர் பக்தர்கள் அவதி
ADDED : அக் 14, 2024 06:19 AM
ராசிபுரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் இடிக்கப்-பட்டதால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ராசிபுரத்தில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில், பேளுக்குறிச்சி கனவாயில் பிரசித்தி பெற்ற ஆஞ்சயேர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி எப்போதும் நுாற்றுக்கணக்கான குரங்-குகள் இருப்பதால் பக்தர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சுவாமி கும்பிடுவதுடன், குரங்குகளுக்கு பழம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து செல்வர்.அதேபோல், இவ்வழியாக நைனாமலை பெருமாள் கோவி-லுக்கு செல்லும் பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசித்த பிறகு தான் செல்வது வழக்கம். தற்போது, ராசிபுரத்தில் இருந்து மோகனுார் வரை சாலை அகலப்படுத்தும் பணியின்போது, கோவில் படிக்கட்-டுகள் இடிக்கப்பட்டன. பணி முடிந்த பிறகும் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டை சரி செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் பக்தர்களால் சிறிது துாரம் மட்டுமே செல்ல முடிகிறது. உச்சியில் இருக்கும் பிரதான கோவில், திருக்கோடி கம்பம் ஆகிய-வற்றுக்கு செல்ல முடிவதில்லை. தற்போது, புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.