/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
/
கறுப்பு பேட்ஜ் அணிந்து வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 01:11 PM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன், தமிழக கிராம நிர்வாக அலுவலர் கூட்டமைப்பு சார்பில், வி.ஏ.ஓ.,க்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டதலைவர் குணசேகரன், செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாநில வருவாய் நிர்வாக ஆணையாளர், டிஜிட்டல் கிராப் சர்வே பணி தொடர்பாக, மேற்கொள்ளப்படும் ஊழியர் விரோத போக்கை கண்டிக்கிறோம்.
டிஜிட்டல் கிராப் சர்வே பணி செய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் போதுமான காலஅவகாசம் வழங்க வேண்டும். குறைகளை களையாமல், டிஜிட்டல் கிராப் சர்வே பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நிர்பந்தம் செய்வதை கண்டிக்கிறோம் என, கோஷம் எழுப்பினர். இதில், வி.ஏ.ஓ.,க்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
* இதேபோல், மோகனுார் தாசில்தார் அலுவலகம் முன், சங்க தலைவர் அன்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலக முன்னேற்ற சங்க தலைவர் ருத்ராஜன் முன்னிலை வகித்தார். டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு பணியை கிராம நிர்வாக அலுவலர்களிடம் திணிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.