/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களுடன் முதல்வர் முகாமில் மின் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
/
மக்களுடன் முதல்வர் முகாமில் மின் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
மக்களுடன் முதல்வர் முகாமில் மின் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
மக்களுடன் முதல்வர் முகாமில் மின் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2024 08:35 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கணபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. களியனுார், புதுப்பாளையம், சமயசங்கிலி, களியனுார் அக்ரஹாரம் ஆகிய பஞ்., பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதில், களியனுார் பஞ்., ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள் மின்வசதி கேட்டு மனு கொடுக்க வந்தனர். திடீரென, 'பல ஆண்டுகளாக எங்களுக்கு மின் வசதி இல்லை. எங்கள் பகுதிக்கு மின் வசதி உடனடியாக வழங்க வேண்டும்' என, கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு எம்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
ஈரோடு எம்.பி., பிரகாஷ் கூறியதாவது: மின்வசதி தேவை என, மக்கள் கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கை கண்டிப்பாக செய்து தரப்படும். சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த, 10 ஆண்டாக கிடப்பில் உள்ளது. நான், எம்.பி.,யாக வந்த பின், பொது சுத்திகரிப்பு பணி கோப்பு, டில்லி அலுவகத்தில் பரிசீலனையில் உள்ளது. ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.