/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியை படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியை படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசிரியை படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசிரியை படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 06:36 AM
நாமக்கல்: தஞ்சை மாவட்டத்தில், பெண் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், நாமக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக.செல்வராசன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி, பள்ளியில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும் கோஷம் எழுப்பினர். ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* அதேபோல், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாடத்திற்கு, மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.