/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மும்முரம்
/
நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மும்முரம்
நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மும்முரம்
நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மும்முரம்
ADDED : அக் 24, 2025 01:22 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, 10வது வார்டு பவுண்டு தெரு, 6வது வார்டு சேலம் சாலை, டயர் சந்தை மற்றும் பழைய இரும்பு கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள், நேற்று துாய்மை பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. மழை காலத்தில், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் என்பதால், ஆங்காங்கே நீர் தேங்கும் பகுதியில், டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ்., கொசு புழுக்கள் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம் காணப்படும். இதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின்படி, பழைய இரும்பு கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில், டயர்களில் தேங்கியுள்ள நீரில் டெங்குவை பரப்பும் கொசு புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. 15 டயர் கடைகள், 10 பழைய இரும்பு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், நீர் தேங்கிய டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறுகையில்,'' டயர், பழைய பொருட்கள் மற்றும் லாரி பட்டறைகளில் அலுவலர்கள் சோதனை செய்யும்போது, டெங்குவை பரப்பும் கொசு புழுக்கள் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஆய்வு பணி தொடர்ந்து நடைபெறும். கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

