/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை
/
மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை
மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை
மரங்கள் வெட்டிய விவகாரம் பள்ளியில் டி.இ.ஓ., விசாரணை
ADDED : ஜன 20, 2024 09:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வளர்ந்திருந்த மரங்கள், மழைக்காலங்களில் உடைந்து விழும் நிலையில் இருந்தது.
இதனால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், 15 வேப்ப மரங்களை வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, முழுவதும் வெட்டி எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.