/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.131 கோடியில் திட்டப்பணிகள்: துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்
/
ரூ.131 கோடியில் திட்டப்பணிகள்: துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்
ரூ.131 கோடியில் திட்டப்பணிகள்: துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்
ரூ.131 கோடியில் திட்டப்பணிகள்: துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்
ADDED : ஜூலை 10, 2025 01:11 AM
நாமக்கல், மக்கல்லில் நடக்கும் அரசு திட்டப்
பணிகள் துவக்க விழாவில் பங்கேற்க, நேற்று இரவு, 8:30 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி வந்தடைந்தார். முன்னதாக, மாவட்ட அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மேயர் கலாநிதி, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக துணை முதல்வர் உதயநிதி, நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு துறைகள் சார்பில், 139 பணிகளுக்கு, 87.38 கோடி ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டியும், 10.80 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற, 36 திட்டப்பணிகளை திறந்தும் வைக்கிறார். பல்வேறு அரசுத்துறை சார்பில், 2,001 பயனாளிகளுக்கு, 33.18 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் தொடர்பாக, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார். நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள், நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குகிறார்.
பின், மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.