/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு
/
துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 10, 2025 01:10 AM
நாமக்கல், நாமக்கல்லில் நடக்கும் அரசு திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த, துணை முதல்வர் உதயநிதிக்கு, மாவட்ட நிர்வாகம், தி.மு.க.,வினர் சார்பில்
உற்சாக வரவேற்பளிக்கப்
பட்டது.
கரூர் மாவட்டத்தில் நடந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி, நேற்று இரவு, 8:30 மணிக்கு, நாமக்கல் வருகை தந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், ப.வேலுார் காவிரி பாலம் அருகே, கலெக்டர் துர்காமூர்த்தி, டி.ஆர்.ஓ., சுமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, காரில் திறந்த வெளியில் நின்று தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
அவருக்கு, தி.மு.க., நிர்வாகிகள் சால்வை, பூங்கொத்து கொடுத்தும், ஆள் உயர மாலை அணிவித்தும் வரவேற்பளித்தனர். இதேபோல், ராசாம்
பாளையம் சுங்கச்சாவடி அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மேற்கு மாவட்ட செயலாளர் (பொ) மூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
மேலும், நல்லிபாளையம் மேம்பாலத்தில் இருந்து பயணியர் மாளிகை வரை, தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். துணை முதல்வர் உதயநிதி, திறந்த வாகனத்தில் கை அசைத்தபடியே பயணியர் மாளிகையை அடைந்தார்.
நாமக்கல் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி, இன்று நாமக்கல்லில் நடக்கும் அரசு விழா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.