ADDED : செப் 16, 2026 05:53 AM

அ நிறம் | அளவு
ராசிபுரம்:ராசிபுரம்
அடுத்த புதுப்பட்டி முனியப்பன்புதுார் பகுதியில் மதுரைவீரன்,
மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு,
கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
முன்னதாக, நேற்று 500க்கும்
மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
மேளதாளம் முழங்க, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரைவீரன்,
மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். அங்கு, சுவாமிக்கு சிறப்பு
பூஜை, வழிபாடு நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
