/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
/
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 22, 2024 06:23 AM
நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், மோகனுார் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கொங்கு மண்டலத்தில், புகழ்பெற்ற தலமாக நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் பெருமாளை வழிபட்டால், திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில், 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து, 3,360 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலை உச்சியில், 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறையின் மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது சிறப்பாகும்.
ஆண்டுதோறும் புரட்டாசி உற்சவ விழா, 6 வாரம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு புரட்டாசி விரதம், கடந்த, 14ல் கடைப்பிடிக்க துவங்கினர். புரட்டாசியில் வரும் முதல் சனிக்கிழமையான நேற்று, ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்தனர். மலை உச்சிக்கு செல்லமுடியாத பக்தர்கள், அடிவாரத்தில் பாத மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை உதவி ஆணையர் இளையராஜா, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல், மோகனுாரில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், பெரமாண்டம்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், வெடியரசம்பாளையம் கரிய வரதராஜ பெருமாள் கோவில், மல்லசமுத்திரம் அழகு சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜ பெருமாள் கோவில், ராசிபுரம் பொன் வருதராஜ பெருமாள் கோவில், உரம்பு பெருமாள் கோவில், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவில், பட்டணம் பெருமாள் கோவில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியது.