/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
/
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : நவ 22, 2025 02:27 AM
சேந்தமங்கலம், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, நேற்று காலை, சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் கருமாரியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள மூலவருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* இதேபோல், குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன், கோட்டைமேடு காளியம்மன், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது.

