ADDED : மே 09, 2026 04:05 AM
குமாரபாளையம்:சித்திரை வெள்ளியையொட்டி, நேற்று குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன்
கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன் கோவில், 24 மனை மாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
