ADDED : ஜன 20, 2025 07:00 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு, கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, கங்கா, யமுனா, காவேரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் தீர்த்தம் பெருமாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், கோபுர கலசங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை, பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடந்தன. புண்யாகவாசனம், வேதபாராயணம், நவக்கிரஹ பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை கடங்கள் புறப்பாடு, தீபாராதனையை தொடர்ந்து, 6:00 மணிக்கு புனித நீரை, கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.