/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள்
/
ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள்
ADDED : டிச 15, 2025 07:37 AM
நாமக்கல்: நாமக்கல், ஆர்.பி.புதுார், பொன் கைலாஷ் கார்டன், குட்டை மேலத்தெருவில் உள்ள மேல்-மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டுதோறும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், மாலை அணிந்து மேல்மருவத்துார் கோவிலுக்கு செல்வர். அதன்படி, நேற்று காலை, செவ்வாடை அணிந்த பக்தர்கள், 500க்கும் மேற்பட்டோர் இருமுடி கட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு வந்து, குருசாமியிடம் துளசி மாலை அணிந்து கொண்-டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்-பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்து ஆதி-பராசக்தி கோவிலுக்கு புறப்பட்டனர்.
அதேபோல், நேற்றில் இருந்து 2026 ஜன., 28 வரை நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, எரு-மப்பட்டி, வளையப்பட்டி, புதன்சந்தை, வேலக-வுண்டம்பட்டி, வள்ளிபுரம் என பல்வேறு பகு-தியை சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் தினமும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்கின்றனர்.

