/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு
/
நாமக்கல்லில் நாளை பக்தி சொற்பொழிவு
ADDED : அக் 31, 2025 12:44 AM
நாமக்கல், நாமக்கல் ஆன்மிக வேள்வி அமைப்பு சார்பில், நாளை (நவ.,1) மாலை 6:30 மணிக்கு நாமக்கல் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில், பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி தலைமை வகிக்கிறார். ஆன்மிக வேள்வி அமைப்பின் தலைவர் குழந்தைவேல் வரவேற்கிறார். உதவி கமிஷனர் இளையராஜா, குருவாயூரப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாலை 5:30 முதல், 6:30 மணி வரை, மோகனுார் விஷ்ணு சகஸ்ரநாம பாராயண மண்டலி சார்பில், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெறும். தொடர்ந்து கும்பகோனம் டாக்டர் வெங்கடேஷ், நாமங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.

