/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துறையூர் சாலை விரிவாக்க பணி பழமையான மரங்கள் அகற்றம்
/
துறையூர் சாலை விரிவாக்க பணி பழமையான மரங்கள் அகற்றம்
துறையூர் சாலை விரிவாக்க பணி பழமையான மரங்கள் அகற்றம்
துறையூர் சாலை விரிவாக்க பணி பழமையான மரங்கள் அகற்றம்
ADDED : அக் 19, 2024 01:07 AM
துறையூர் சாலை விரிவாக்க பணி
பழமையான மரங்கள் அகற்றம்
எருமப்பட்டி, அக். 19-
நாமக்கல், துறையூர் சாலையில் உள்ள ரெட்டிபட்டியில் இருந்து எருமப்பட்டி வரை, 17 கி.மீ., தூரத்திற்கு, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்காக, நெடுஞ்சாலைத்துறையின் மூலம், வளைவுகள் இல்லாத சாலை அமைக்கும் பணிக்காக, சாலையின் இரு புறங்களிலும், 5 மீட்டர் தூரத்திற்கு மையக்கோடு அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மையக்கோட்டில் இருந்து சாலை விரிவாக்கம் செய்யும், 10 மீட்டர் தூரம் வரை உள்ள பழமையான புளி, வாதன், வேப்ப மரம்
உள்ளிட்ட பல்வேறு வகையான, 100ஆண்டு பழமையான மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.