/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து தர்ணா
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து தர்ணா
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து தர்ணா
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து தர்ணா
ADDED : அக் 03, 2024 07:17 AM
பள்ளிப்பாளையம்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, தனிநபர் ஒருவர் தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், சவுதா-புரம் பஞ்சாயத்தில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், அப்பகுதி மக்கள், தங்கள் குறைக-ளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். அதில், வேலுமணி என்பவர், 'சவுதாபுரம் பகு-தியில் உள்ள ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்-ளனர். ஆதாரத்துடன புகார் ஆனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்-பட்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவேண்டும். அதுவரை கூட்டத்தை முடிக்க கூடாது. நடவ-டிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிக்கிறேன்' என தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, கிராம பஞ்., பி.டி.ஓ., கிரிஜா, 'ஆக்கிர-மிப்பை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்-டுள்ளது. அவ்வாறு அகற்றவில்ல என்றால் நட-வடிக்கை எடுக்கப்படும்' என்றார். அதன்பின், கிராம சபை கூட்டம் நடந்தது.

