/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : அக் 19, 2024 02:16 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாமக்கல் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணிகள் மற்றும் பாதுகாப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என, 231 பேர் சுழற்சி முறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களின் போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நாள் ஒன்றுக்கு, 754 ரூபாய் சம்பளம் வங்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது 665 ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வழங்குவதாக புகார் எழுந்-துள்ளது.
இந்நிலையில், முழு சம்பளம் வழங்க வேண்டும். பெண்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது.
பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., பணத்தை தங்களது கணக்கில் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக மருத்துவமனை துாய்மைப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம், அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி
வருகின்றனர்.
போராட்டம் காரணமாக, நாமக்கல் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணி, பாதுகாப்பு பணி பாதிக்கப்பட்டது.