/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திமிங்கில எச்சம் விற்பனை வழக்கில்முக்கிய குற்றவாளியை பிடிக்க திணறல்
/
திமிங்கில எச்சம் விற்பனை வழக்கில்முக்கிய குற்றவாளியை பிடிக்க திணறல்
திமிங்கில எச்சம் விற்பனை வழக்கில்முக்கிய குற்றவாளியை பிடிக்க திணறல்
திமிங்கில எச்சம் விற்பனை வழக்கில்முக்கிய குற்றவாளியை பிடிக்க திணறல்
ADDED : ஏப் 26, 2025 01:08 AM
ராசிபுரம்:திமிங்கில எச்சம் விற்பனை தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே, தனியாருக்கு சொந்தமான ஜி.வி.ஆர்., தோட்டத்தில், திமிங்கில எச்சத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்யவதாக, ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 18ல் வனத்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து, அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, இரண்டு பேர் தப்பியோடினர்.
அங்கு, 'ஆம்பர் கிரீஸ்' என்றழைக்கப்படும் திமிங்கில எச்சத்தை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், பேளுக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன், 55, சேலத்தை சேர்ந்த ஜலீல், 58, ரவி, 55 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 கிலோ திமிங்கில எச்சம் மற்றும் ஐந்து மொபைல் போன், இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளிகள், இரண்டு பேரை இதுவரை வனத்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. மொபைல் போன்களை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டதால் அதன் மூலமும் அவர்களை பின்தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்படி, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், ஒருவாரமான நிலையில், முக்கிய குற்றவாளிகள் இருவரையும் கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

